அமெரிக்க வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பதாகைகள்!

0
123

அயோத்தியில் உருவாக்கப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த 22-ம் திகதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு நாளாந்தம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இவ்வாறான நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நேற்று விமானம் மூலம் ‘பிரபஞ்சம் சொல்கிறது ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் வானில் பறக்கவிடப்பட்டது.

அமெரிக்க வானில் பறக்கவிடப்பட்ட

இந்த நிகழ்வைக் காண ஏராளமான இந்திய-அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து காவிக் கொடிகளை அசைத்து “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டனர். 

இந்த வான்வழி நிகழ்ச்சியின் அமைப்பாளரான உமாங் மேத்தா கூறுகையில், “500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க வானில் பறக்கவிடப்பட்ட