தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் யார்?

0
167

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நான் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயரை முன்மொழிந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி பாரிய வரலாற்றினை கொண்ட கட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமி்ழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு தரப்பட வேண்டும் என தாங்கள் ஒரு முன்மொழிவினை வைத்துள்ளதாக கூறிய அவர், அதேசமயம் மட்டக்களப்பில் இருந்து பொதுச் செயலாளர் பதவிக்கு மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.