மூன்று நிறங்களில் உருவாகும் சாம்சங்கின் கேலக்ஸி ரிங்..

0
145

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் வெளியிட்டது.

எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், இதில் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான டீசரில் கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

புதிய கேலக்ஸி ரிங் சாதனத்தை பயன்படுத்தியதாக டெக்  துறையை சேர்ந்த கிரீன்கார்ட் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சாதனத்தை தன்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும், சிறிது நேரம் அதை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கேலக்ஸி ரிங் சாதனம் மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

புதிய சாதனம் அதிகபட்சம் மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாம்சங் வெளியிட்ட டீசர் வீடியோவில் கேலகிஸி ரிங் சில்வர் நிறம் கொண்டிருந்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் கேலக்ஸி ரிங் விலை விவரங்கள் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

தற்போதைய தகவல்களின் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி ரிங் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.