யாழ் நல்லூர் கந்தனுக்கு இன்று நெற்புதிர் அறுவடை!

0
129

தைப்பூச தினத்த்தை முன்னிட்டு வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (24) காலை இடம்பெற்றது.

தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்கு செல்வார்கள்.

290ஆவது ஆண்டாக நெற்புதிர் அறுவடை விழா

அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தசுவாமியாருக்கு படையல் செய்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.

இவ்வழிபாட்டு முறை அக்கோயிலின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது. அதேவேளை நெற்புதிர் அறுவடை விழா 290ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நல்லூர் கந்தனுக்கு இன்று நெற்புதிர் அறுவடை! | Rice Harvest Today For Nallur Kandan Thaipusam
யாழ் நல்லூர் கந்தனுக்கு இன்று நெற்புதிர் அறுவடை! | Rice Harvest Today For Nallur Kandan Thaipusam