உலகிலேயே அதிக சொத்து வைத்துள்ள முதல் ஆளாக புடின்!

0
123

உலகில் அதிக சொத்து மதிப்புக்களைக் கொண்ட அரசியல் வாதிகளின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஒட்டுமொத்த சொத்தானது சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் அவரது ஆண்டு வருமானம் 140,000 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ரஷ்ய அதிபர் புடினுக்கு கருங்கடல் மாளிகை, கசினோக்கள், ஆடம்பர நீச்சல் குளங்கள், திரையரங்குகள், இரவு விடுதிகள், பார்கள், விலை உயர்ந்த 700 க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.