இலங்கை மற்றும் இந்தியர்கள் கூடும் கச்சதீவு அந்தோனியார் திருவிழா தொடர்பில் அறிவிப்பு!

0
152

புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்வம் அடுத்த மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளிசிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (23) இடம்பெற்றது.

குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றது குறித்த கூட்டத்தில் இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்து அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உணவு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படையின் பிராந்திய பொறுப்பதிகாரி பொலிஸ் உயரதிகாரிகள் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறை சார் திணைக்களின் தலைவர்கள் கலந்து என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.