பிக் பாஸ் எ டீம் – பி டீம்
பிக் பாஸ் வீட்டில் எ டீம் – பி டீம் என இரு பிரிவுகள் இருந்தனர். இதில் ஜோவிகா, பூர்ணிமா, மாயா, நிக்சன், விஜய் வர்மா மற்றும் சிலரும் எ டீம் என்றும், விஷ்ணு, தினேஷ், மணி உள்ளிட்டோர் பி டீம் என்றும் கருதப்பட்டனர்.
இந்த இரண்டு குரூப்பில் எ டீமை சேர்ந்த பூர்ணிமா, மாயா, நிக்சன், விக்ரம் போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தங்களுடைய சந்தித்து கொண்டாடினார்கள். இந்த சந்திப்பு வனிதாவின் வீட்டில் நடந்தது. அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த வனிதா, பிக் பாஸ் 7ல் போட்டியிட்ட தனது மகளுக்கும், அவருடைய குரூப்பிற்கும் சப்போர்ட் செய்து வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
ஒன்றுகூடிய பிக் பாஸ் நட்சத்திரங்கள்
அந்த வகையில் தற்போது தனது உறவினர் வீடு திருமணத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களை உடன் அழைத்து சென்றுள்ளார் வனிதா. அங்கு கல்யாண விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்..