காத்தாடி கயிற்றில் தொங்கி 30 அடி உயரம் சென்று செல்ஃபி எடுத்த யாழ் இளைஞன்!

0
136

யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இளைஞர் ஒருவர் பறக்கும் ஒரு பெரிய காத்தாடியின் கயிற்றில் ஏறி சுமார் 30 அடி உயரத்திற்குச் சென்று செல்பி எடுத்ததாக யாழ்ப்பாண இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞன் எப்படி காத்தாடியின் கயிற்றில் ஏறினார் என்பதை காட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்சமயம் வைரல் ஆகியுள்ளது.

குறித்த இளைஞன் வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற காத்தாடி திருவிழாவிற்காக தயார் செய்யப்பட்ட பெரிய காத்தாடியில் பறக்க பயன்படுத்தப்படும் கயிற்றில் ஏறியே இவ்வாறு செல்பி எடுத்துள்ளார்.

காத்தாடியின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசெளகரியத்தை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு பெரிய காத்தாடியை பறக்கவிடச் சென்ற குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயிரத்துக்கு சென்ற சம்பவமும் கடந்த 2021 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

வல்வெட்டித்துறை காத்தாடி திருவிழாவிற்காக தயாரிக்கப்படும் சில காத்தாடிகள் சுமார் 30 முதல் 40 அடி அளவில் இருக்கும், மேலும் பெரிய பட்டங்களை பறக்க நைலான் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.