துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மூவரடங்கிய நீதியரசர் குழாம் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்க ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொதுமன்னிப்பை வலிதற்றதாக்கி தீர்ப்பு
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதொயாக இருந்த காலத்தில் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். இந்நிலையில் கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பையே உயர்நீதிமன்றம் வலிதற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் கோட்டாபய துமிந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.