‘AI’ தொழில்நுட்பம்: உலகின் முதல் “Transparent OLED“ தொலைக்காட்சி அறிமுகம்

0
229

எல்ஜி (LG) டெக் நிறுவனம் இவ்வாண்டு ஆரம்பத்தில் ஒயர்லஸ் ஆடியோ மற்றும் வீடியோ டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் கொண்டு உலகத்தின் முதல் Wireless மற்றும் Transparent OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைக்காட்சியை எல். ஜி நிறுவனம் புதிய Alpha 11 AI processor கொண்டு உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் CES (Consumer Technology Assosiation) நடத்தின் உலகின் பெரிய டெக் நிகழ்வில் தனது புதிய டிவி பிராடக்டை எல்ஜி (LG) நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டின் CES நிகழ்ச்சியில் உலகின் முதல் Wireless மற்றும் Transparent OLED தொலைக்காட்சியை எல்ஜி (LG) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு OLED-T என பெயரிட்டுள்ளது. இது தான் உலகின் முதல் ஒயர்லஸ் மற்றும் ட்ரான்ஸ்பரண்ட் OLED TV ஆகும்.

இந்த தொலைக்காட்சி 4K தரம் கொண்ட, ஒயர்லஸ் ஆடியோ மற்றும் வீடியோ டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது முன்னைய தயாரிப்புக்களை விடவும் 4 மடங்க அதிக செயற்திறன் மற்றும் 70 வீத கிராஃபிக்ஸ் பர்பார்மன்ஸ், 30 வீத அதிவேக ப்ராசஸிங் திறன் கொண்டது.

இந்த தொலைக்காட்சியை சுவற்றில் மாட்டுவது போல அல்லது ஸ்டான்ட் ஆப்ஷனுடன் தனியாக வாங்கி கொள்ளலாம் (Standalone Purchase).