கப்டன் பண்டிதரின் 39வது நினைவு தினம்: யாழ் மாநகர முன்னாள் முதல்வர் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு

0
141

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கெப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (09) அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர் யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கெப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Oruvan
Oruvan