உடலில் அளவுக்கு மிகுதியாக சேர்கின்ற சோடியம், பொட்டாசியம் போன்ற மினரல்களை வெளியேற்றும் நடவடிக்கையை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன.
இவ்வாறு கழிவுகளை வெளியேற்றுகின்ற சிறுநீரகங்களில், அதன் நடவடிக்கையை மிஞ்சி கழிவுகள் சேரக்கூடும்.
நம் ரத்தத்தில் சேர்கின்ற கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றுவதில் சிறுநீரகங்களின் பங்கு அபாரமானது.
அதேபோல நாம் சாப்பிடும் உணவுகள், மருந்துகள் மற்றும் திரவங்கள் போன்ற அனைத்திலும் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகங்களில் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
குறிப்பாக உடலில் அளவுக்கு மிகுதியாக சேர்கின்ற சோடியம், பொட்டாசியம் போன்ற மினரல்களை வெளியேற்றும் நடவடிக்கையை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன. இவ்வாறு கழிவுகளை வெளியேற்றுகின்ற சிறுநீரகங்களில், அதன் நடவடிக்கையை மிஞ்சி கழிவுகள் சேரக்கூடும்.
இத்தகைய கழிவுகளை சுத்திகரிக்காவிட்டால் நாளடைவில் சிறுநீரகங்கள் பாதிப்பு அடையலாம்.
அதே சமயம் சிறுநீரக கழிவுகளை சுத்திகரிக்க நாம் அன்றாடம் எடுத்துக் கொள்கின்ற திரவங்கள் மற்றும் உணவுகள் ஆகியவையே போதுமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு குடிநீர் :
சிறுநீரகங்களை சுத்திகரிப்பதிலும், அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும் தண்ணீரின் பங்கு மகத்தானது. அத்துடன் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்க அடிக்கடி தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.
நாளொன்றுக்கு எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் அல்லது குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
கிரேன்பெர்ரி :
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரையும் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக சிறுநீர் பாதை தொற்று இருக்கிறது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும். அந்த பாதிப்பின் விளைவால் சிறுநீரகங்களும் பாதிப்பு அடையும்.
இருப்பினும் கிரேன்பெர்ரி பழங்களை சாப்பிட்டால் சிறுநீர் பாதை தொற்றுக்கு தீர்வு காணலாம் மற்றும் சிறுநீரகங்களையும் காத்துக் கொள்ளலாம்.
கொழுப்புச் சத்துக் கொண்ட மீன்கள் :
ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து கொண்ட சால்மன், டுனா, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை சாப்பிட்டால் நம் உடலில் மிகுதியாக இருக்கின்ற கொலஸ்ட்ரால் குறையும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை இந்த கொழுப்பு அமிலம் குறைக்கும்.
நம் சிறுநீரக பாதிப்பிற்கு முக்கிய அறிகுறியான உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதால் நம் ஆரோக்கியம் மேம்படும்.
சிட்ரஸ் பழங்கள் :
எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கும் மற்றும் அதில் உள்ள சிட்ரின் சத்து நம் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.
வெள்ளரிக்காய் :
கோடை காலங்களில் சாதாரணமாக சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் நம் தாகத்தை தணிக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது.
மேலும் இது சிறுநீரகங்களில் செயல்பாட்டை ஊக்குவித்து, சிறுநீரக கற்கள் உருவாக்குவதை தடுக்கிறது.
சிவரிக்கீரை :
கலோரி சத்து குறைவாக உள்ள சிவரிக்கீரையை சாப்பிட்டால் நம் செரிமான திறன் மேம்படும் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி அதன் செயல்பாட்டை இந்த கீரை ஊக்குவிக்கும்.