போலந்து நாட்டைச் சேர்ந்த வலர்ஜன் ரோமானோவ்ஸ்கி என்பவர் கொட்டும் மழையில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பனியில் மூழ்கி சாதனையை படைத்துள்ளார்.
போலந்து நாட்டைச் சேர்ந்த வலர்ஜன் ரோமானோவ்ஸ்கி என்பவர் கொட்டும் மழையில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஐஸ் கட்டிகள் கொட்டப்பட்ட பெட்டிக்குள் இருந்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரொமைன் வாண்டன்டோர்ப் 2 மணி 35 நிமிடங்கள் 33 வினாடிகள் ஐஸ் கட்டிகள் அடங்கிய பெட்டிக்குள் இருந்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், ரோமானோவ்ஸ்கி 3 மணி நேரம் 28 வினாடிகள் ஐஸ் கட்டிகள் அடங்கிய பெட்டிக்குள் இருந்து வெற்றிகரமாக அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
மேலும், கின்னஸ் உலக சாதனைகளுக்கு ரோமானோவ்ஸ்கியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ரோமானோவ்ஸ்கி குறித்து கூறியதாவது ; “நான் பல ஆண்டுகளாக குளிர்ச்சியை எதிர்கொள்கிறேன்.
நான் பல பயிற்சிகளை மேற்கொண்ட பின் தான் இந்த சாதனையை செய்தேன். உடல் மற்றும் மனதுக்கு வேலை செய்வது எனது விருப்பம், அது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது ” என்று கூறினார்.