2028 வரை நீடிக்க ஆசை: பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்செலோட்டி

0
179

ஸ்பானி‌ஷ் கால்பந்து குழுக்களில் மிக முக்கியமான அணி ரியால் மட்ரிட். தற்போது அதன் பயிற்றுவிப்பாளராக இருக்கும் கார்லோ அன்சிலோட்டிக்கு 2026 ஆண்டு வரை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

64 வயதான அன்சிலோட்டி 2021ஆம் ஆண்டு ரியால் மட்ரிட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரின் ஒப்பந்தம் வரும் ஜூன் மாதத்துடன் முடிய இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

“அணி நன்றாக செயல்பட்டதால் எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் வெற்றிகளைக் குவித்தால் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். 2028ஆம் ஆண்டு வரை ரியால் மட்ரிட்டில் இருக்க எனக்கு ஆசை,” என்று அன்சிலோட்டி தெரிவித்தார்.

Oruvan

பிரேசில் தேசிய அணிக்கு அன்சிலோட்டி பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேச்சுகள் இடம்பெற்றநிலையில் அவர் ரியால் மட்ரிட் குழுவில் தொடர்வதாக அறிவித்தது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லீக் கிண்ணம், இரு சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், இரண்டு லீக் அணிகளுக்கான உலகக் கிண்ணங்களை வென்றுள்ளது ரியால் மட்ரிட்.

இத்தாலியரான அன்சிலோட்டி 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரை ரியால் மட்ரிட் அணியில் பயிற்றுவிப்பாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.