சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து டேவிட் வோர்னர் ஓய்வு

0
307

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார்.

லோர்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தாம் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

எனினும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய சாதனை
ஓய்வு தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகின்றேன்.

உலக கிண்ணப்போட்டிகளின் போது அதனை நான் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளேன். இந்தியாவில் உலக கிண்ணத்தை வென்றது மிகப்பெரிய சாதனை. ஆகவே நான் இன்று அந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னை உலகின் வேறு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கும் அவுஸ்திரேலிய அணியை முன்னோக்கி நகர அனுமதிக்கும் தீர்மானத்தை நான் எடுத்துள்ளேன் என டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

சாதனைகள்

அவுஸ்திரேலிய அணியின்  நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களுடன் 6932 ஓட்டங்களை பெற்றுள்ளார் – அவரது சராசரி 45.30 ஆக காணப்படுகின்றது.

அத்துடன் போட்டிகளில் அதிக ஓட்ட எண்ணிக்கையாக 179 ஸ்ட்ரைக் – ரேட்: 97.26 நான்கு ஓட்டங்கள்: 733 சிக்ஸர்கள்: 130 சதம்: 22 அரைச் சதம்: 33 என சாதனை படைத்துள்ளார்

இரண்டு முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றவர் புத்தாண்டு தினத்தன்று காலை தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.