சர்ச்சைக்குரிய காணொளி குறித்து விளக்கம்

0
129

பொலிஸார் நபரொருவரை தாக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குருநாகல் பொலிஸ் அதிகாரிகள் இருவர் நேற்று முன்தினம் (27) வெடருவ பிரதேசத்தில் வைத்து நபரொருவரை கைது செய்வதற்கு முயற்சித்த போது அந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த நபரொருவரினால் பதிவு செய்யப்பட்ட காணொளியே இவ்வாறு பகிரிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த காணொளியில் பொலிஸார் இருவர் சந்தேக நபரை தரையில் பிடித்து கயிற்றால் கட்டி அவரை ஓடவிடமால் தடுப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு அதிகாரி சந்தேக நபரின் மீது அமர்ந்துள்ளதையும் மற்றவர் சந்தேக நபரின் கால்களைக் கட்டுவதையும் அவதானிக்க முடிந்தது.

இந்தச் சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெளிவுபடுத்துள்ளாா்.

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டு தொடர்பில் சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பெயரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சந்தேகநபரை கைது செய்ததாக அவர் கூறியுள்ளாா். சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.