Year ender: ஆப்பிள் வரலாற்றில் முதல்முறை! ஐபோனில் வந்த மாற்றம்! 2023ல் டெக் உலகில் இதுதான் முக்கியம்

0
143

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றில் இல்லாத ஒரு முக்கிய மாற்றத்தை இந்தாண்டு செய்திருந்தது. அதற்கு என்ன காரணம். இது பயனாளர்களுக்கு எந்தளவுக்குப் பலன் தரும் என்பதை நாம் பார்க்கலாம்

இப்போது மொபைல்கள் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கணினி நமது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை விட செல்போன் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம்

டேட்டிங் முதல் ஷாப்பிங் வரை இப்போது அனைத்துமே மொபைல்களில் செய்ய முடிகிறது. இதன் காரணமாகவே வெளியே சென்றால் நாம் கையில் எடுக்கும் முதல் விஷயமாக மொபைல்கள் இருக்கிறது.

ஆப்பிள்: இதனால் சந்தைக்குப் புதிதாக வரும் மொபைல்கள் மீது இயல்பாகவே கவனம் அதிகமாக இருக்கும். அதிலும் ஆப்பிள் வெளியிடும் ஐபோன் மீது தான் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இருக்கும். மற்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு 10, 15 செல்போன்களை ரிலீஸ் செய்தாலும் கூட ஆப்பிள் நிறுவனம் எப்போதும் ஆண்டுக்கு ஒரே ஒரு சீரியஸ் மொபைல்களை மட்டுமே வெளியிடும். அதன்படி இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15ஐ வெளியிட்டது.

து வழக்கமாக ஆப்பிள் வெளியிடும் ஒரு ஐபோன் தானே.. இதில் என்ன சிறப்பு என உங்களுக்குக் கேள்வி எழலாம். ஆனால், மற்ற ஐபோன்களுக்கும் இந்த ஐபோனுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை வெளியிட்டு வரும் நிலையில், ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாற்றம் நடந்துள்ளது. அது என்ன மாற்றம்.. எதற்காக அது நடந்தது. இதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை என்பது குறித்துப் பார்க்கலாம்.

முக்கிய மாற்றம்: ஆப்பிள் நிறுவனம் கடந்த செப். மாதம் நடந்த Wonderlust நிகழ்வில் ஐபோன் 15 வெளியானது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஐபோன்களில் ஆண்டிராய்டு மொபைல்களில் இருப்பது போன்ற டைப் சி சார்ஜர்கள் இருந்தன. வழக்கமாக ஐபோன்களில் சார்ஜ் போடத் தனி பின் இருக்கும். அதாவது அனைத்து வகையான ஆண்டிராய்டு மொபைல்களில் டைப் பி, டைப் சி பின்கள் இருந்தாலும் இந்த ஐபோன்களின் சார்ஜர்கள் வேறுபட்டு இருக்கும்.

இதனால் ஐபோன்களை வாங்குவோர் மற்ற மொபைல் சார்ஜர்களை பயன்படுத்த முடியாது. எங்குச் சென்றாலும் தனியாக கேபிளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையே இருந்தது. இது பெரும் சிரமத்தைத் தருவதாக இருந்ததாகப் பலரும் பல ஆண்டுகளாகக் கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டது.அ தாவது 2024 செப். மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்கப்படும் அனைத்து மொபைல்களிலும் டைப் சி சார்ஜர் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

என்ன காரணம்: பயனாளர்களின் நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்தியாவிலும் கூட கிட்டதட்ட இதே போன்ற விதி இருந்தது. நமது நாட்டில் மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல்களிலும் டைப் சி தான் இருக்க வேண்டும் என்பது விதி. தொடக்கத்தில் இந்த விதிகளை ஆப்பிள் எதிர்த்தாலும் பிறகு சத்தமே இல்லாமல் தனது ஐபோன் 15 மொபைல டைப் சி சார்ஜர் பின் உடன் வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் வரலாற்றில் ஐபோன் ஒன்று டைப் சி போர்ட்டுடன் வருவது இதுவே முதல்முறையாக இருக்கும். இது ஐபோன் யூசர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் ஐபோன் வைத்திருப்பவர்கள் எங்குச் சென்றாலும் தனியாக ஒரு கேபிளை எடுத்துச் செல்ல தேவையில்லை. மேலும், ஃபாஸ்ட் சார்ஜ், ஃபாஸ்ட் டேட்டா டிரான்ஸ்பர், கூடுதலாக டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் கனெக்ட் செய்வது என வகைகளில் உதவியாக இருக்கும். வரும் காலத்திலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இந்த டைப் சி சார்ஜர்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் உதவும் ஒரு மிகப் பெரிய ஒரு மாற்றத்தை இந்தாண்டு தொடங்கி வைத்துள்ளது என்றே சொல்லலாம்.