ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துபவரா நீங்கள்..? எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் நிறுவனம்

0
161

நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்சை பயன்படுத்துகிறீர்களா? உங்களது ஆப்பிள் வாட்சை சார்ஜிங் செய்ய நான்-சர்ட்டிஃபைட் அதாவது சான்றளிக்கப்படாத சார்ஜரை பயன்படுத்துகிறீர்களா? ஆப்பிள் வாட்சின் சார்ஜர் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் கேஜெட் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், நீண்ட காலமாகவே போலி தயாரிப்புகள், பாகங்கள் மற்றும் சார்ஜர்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சான்றளிக்கப்படாத அல்லது போலி ஆப்பிள் வாட்ச் சார்ஜர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, அங்கீகரிக்கப்படாத சார்ஜர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சாத்தியமான அபாயங்களை கோடிட்டு காட்டியுள்ளது. அங்கீகரிக்கப்படாத (சான்றளிக்கப்படாத) சார்ஜர்களை பயன்படுத்தி டிவைஸை சார்ஜ் செய்வதால் இயல்பான வேகத்தில் சார்ஜ் ஆகாமல் ஸ்லோவாக சார்ஜ் ஏறுவது மற்றும் பேட்டரியின் ஆயுட்காலம் குறைவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் யூஸர்கள் Apple மற்றும் Apple MFi சான்றிதழைப் பெற்ற சார்ஜர்களை பயன்படுத்தி மட்டுமே தங்களது வாட்ச்-ஐ சார்ஜ் செய்ய ஆப்பிள் அறிவுறுத்தி உள்ளது. எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப்பிள் அக்சஸரீஸ் அல்லது ஆப்பிள் MFi-களை உங்களால் அடையாளம் காண முடியாவிட்டால், அவற்றை அடையாளம் காண உதவும் சில விவரங்களை யூஸர்களுக்காக ஆப்பிள் பட்டியலிட்டுள்ளது

ஆப்பிள் நிறுவனம் தயாரித்திருக்கும் உண்மையான சார்ஜிங் கனெக்டர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். சில ஆப்பிள் வாட்ச் சார்ஜர்கள் சார்ஜிங் கேபிளில் டெக்ஸ்ட் மற்றும் ரெகுலேட்டரி மார்க்கிங்ஸை கொண்டிருக்கும் என ஆப்பிள் கூறியுள்ளது.

தங்களால் தயாரிக்கப்படாத சார்ஜர்களின் சார்ஜிங் கனெக்டரின் மேற்பரப்பில் வெவ்வேறு வண்ணங்கள், டெக்ஸ்ட் அல்லது பிற டிசைன்கள் இருக்கலாம் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. தவிர அதிகாரப்பூர்வ ஆப்பிள் பாகங்கள் அல்லது MFi-சான்றளிக்கப்பட்ட சார்ஜர்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ள யூஸர்களுக்கு உதவும் வகையில், அதிகாரப்பூர்வ ஆப்பிள் வாட்ச் சார்ஜர்களுடன் வரும் மாடல் எண்களையும் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அவை A1570, A1598, A1647, A1714, A1768, A1923, A2055, A2056, A2086, A2255, A22876, A2255, A2255, A22555 , A2652, A2879 மாடல்கள் ஆகும்