உலகில் அதிக உப்பு செறிவு கொண்ட ஏரி: இறால்கள் மாத்திரம் வாழ்கின்றன

0
150

உலகிலேயே உப்பு செறிவு அதிகமுள்ள நீர் ஏரி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் மோனோ கவுண்டி பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. அதிக உப்புத்தன்மை கொண்ட இந்த ஏரி நீரில் சாதாரண நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடியாது.

அதில் மீன், நண்டுகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை. எனினும் ஏரியில் ‘பிரைன் இறால்’ என்ற ஒரு வகை இறால் அதிகளவில் உள்ளது.

பருவகாலங்களில் லட்சக்கணக்கான பறவைகள் இந்த ஏரிக்கு உணவை தேடி இடம்பெயர்கின்றன. இந்த ஏரி சுமார் 7.60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இயற்கையின் அதிசயம் என கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கலிபோர்னியா மாநில அரசாங்கம் அதன் உப்பு செறிவைக் குறைக்க ஏரியில் நன்னீரை உட்செலுத்தியது. இதனால் இறால்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் பறவைகளின் வருகையும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஏரியை இயல்பு நிலைக்கு கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது.