மீண்டும் வரும் நடிகை மீனா: சின்னத்திரையில் புதிய அவதாரம்

0
174

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2006-ல் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி 10 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

பின்னர் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ‘ஜோடி ஆர் யூ ரெடி’ என்ற புதிய நடன நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் நடிகை மீனா, நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி ஆகிய மூவர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இதன்மூலம் மீனா, ஸ்ரீதேவி ஆகிய இரண்டு நடிகைகளும் ரீ எண்ட்ரி கொடுக்கின்றனர்.

Oruvan