38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் வைத்துக்கொள்ளமுடியும்..! முரண்டு பிடிக்கும் ரிஷி

0
173

பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்னும் விதி அறிமுகப்படுத்தப்பட்ட விடயம் நாட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது.

பின்னர் அந்தர் பல்டி அடித்த உள்துறை அலுவலகம், 38,700 பவுண்டுகளுக்கு பதிலாக, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள், பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது.

முரண்டு பிடிக்கும் ரிஷி

இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி மீண்டும் குட்டையைக் குழப்பியுள்ளார். நாங்கள் சொன்னதை செய்தே தீருவோம் என அடம்பிடிக்கும் ரிஷி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, 2025இல் மீண்டும், 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்ற நிலை கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார் அவர்.

சொன்னதைச் செய்யாமல் விடமாட்டேன்: புலம்பெயர்தல் விடயத்தில் முரண்டு பிடிக்கும் ரிஷி | Rishi Is Conflicted On Migration

அதாவது, அடுத்த ஆண்டு, அதாவது 2024ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், பிரித்தானியர்கள் பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வைத்துக்கொள்ள அனுமதிக்கும் வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்படும் என்றும், மீண்டும் அது 2025இல் 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் ரிஷி தெரிவித்துள்ளார்.

இதனால், பிரித்தானியரல்லாதவர்களைத் திருமணம் செய்துள்ள பிரித்தானியர்கள் பலர் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.