யுக்திய சுற்றிவளைப்பில் 2938 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்..!

0
143

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையின் ஊடாக 2938 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் யுக்திய என்னும் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின் ஊடாக 2938.73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனங்கள் கைப்பற்றல்

இந்த நடவடிக்கையின் மூலம் 1427 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1370 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள், கட்டடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் மொத்த பெறுமதி 140.5 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி முதல் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய சுற்றிவளைப்பில் இலட்சக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் | Ukthiya 2928 Lakhs Asstest Seized

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

இதேவேளை, அடையாளம் காணப்பட்டுள்ள பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் 109 பேரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.