கொக்கெய்ன் போதைப் பொருளை சட்டப்பூா்வமாக திட்டமிடும் சுவிட்சர்லாந்து

0
112

சுவிட்சர்லாந்து தலைநகா் பொ்னில் கொக்கெய்ன் போதைப் பொருளை சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து சுவிஸ் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக கொக்கெய்னை  சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து ஆராயும் நாடாக சுவிட்சர்லாந்து மாறியுள்ளது.

கள்ளச்சந்தையில் அமோக விற்பனை 

தலைநகர் பொ்னில்நகரில் கொக்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை.

கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுகிறது.

சுவிட்சர்லாந்தில் சட்டப்பூா்வமாகும் கொக்கெய்ன் | Cocaine Is Legal In Switzerland

எனவே, கொக்கெய்னை சட்டபூா்வ கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருளாக அங்கீகரித்தால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சந்தையைக் கண்காணிக்கவும் முடியும் என்று நிபுணா்கள் கூறி வருகின்றனா்.

அதையடுத்து, சோதனை முறையில் கொக்கெய்னை சட்டபூா்வமாக்குவதற்கு நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

எனினும், அதனை செயல்படுத்த பொ்ன் மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுடன் அத்துடன், அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.