அம்மா வந்திருந்தால் டபுலா சொல்லியிருப்பா: சூடு மணி, ரவீனா காதல் விவகாரம்

0
160

அந்த அம்மா நேற்று வந்து விளாசியது பற்றி ரவீணாவும், மணியும் தலைவன் விக்ரமை சாட்சியாக வைத்து பேசிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தனியாக பேசக் கூடாது என்று சொன்னதாலோ என்னவோ விக்ரமை உடன் வைத்து மணியும், ரவீணாவும் பேசியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பேச, இதில் நான் என்னடா பண்றேன் என்பது போன்று விக்ரம் முழிக்கின்றார்.

என்னை ஆரம்பத்திலேயே அசிங்கப்படுத்திட்டாங்க இரண்டு பேருமே என ரவீணாவிடம் கூறியிருக்கிறார் மணி சந்திரா. இது தப்பா போகும் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா வந்திருந்தால் சொல்லியிருப்பாங்களானு தெரியல எனக்கு என மணி கூறினார்.

அம்மா வந்திருந்தால் டபுளாக சொல்லியிருப்பாங்கனு ரவீணா சொன்னார். என்னடா இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்காங்க, என்ன இது என்பது மாதிரி தான் இருந்தது ரவீணாவிடம் கூறினார் மணி.

ரவீணா வீட்டில் இருந்து வந்தவர்களுக்கு மணி சந்திராவை பிடிக்கவில்லை. மணியின் அம்மா நடந்து கொண்டதை பார்த்தால் அவருக்கு ரவீணாவை பிடிக்கவில்லை என்பது போன்று தெரிகிறது.

இரு வீட்டாரும் இப்படி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தான் அது சுவாரஸ்யமாகியிருக்கிறது. எதிர்ப்பு வருகிறது என்பதற்காக காதலை கைவிடும் ஆள் போன்று மணியும், ரவீணாவும் தெரியவில்லை.