உங்களுக்கு 2024-ல் செல்வம் வீடு தேடி வருனுமா?: இந்த சக்திவாய்ந்த செடிகளை வீட்டில் வளருங்கள்

0
151

நாம் தற்போது 2023ம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2024 புத்தாண்டிற்குள் நுழையவுள்ளோம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வருகின்ற புத்தாண்டு சிறப்பாக இருக்க ஒருசில செடிகளை வாங்கி வைக்கலாம்.

இப்போது வருகின்ற 2024ம் ஆண்டு செல்வ செழிப்போடு இருக்க எந்த மாதிரியான செடிகளை புத்தாண்டு நாளில் வீட்டில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மூங்கில் செடி

மூங்கில் செடி செல்வத்தை ஈர்க்கும் ஒரு அதிர்ஷ்ட செடி. இந்த செடியை வீட்டில் வைத்தால், அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதோடு, வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டின் நிதி நிலைமையும் உயரும்.

Oruvan

அந்தூரியம்

அந்தூரியம் மிகவும் அதிர்ஷ்டமான செடியாக கருதப்படுகிறது. இந்த அந்தூரியம் செடியை புத்தாண்டு நாளில் வீட்டிற்கு கொண்டு வந்தால், அது அந்த ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும்.

Oruvan

பொன்சாய் மரம்

பொன்சாய் மரம் மற்றொரு அதிர்ஷ்டமான செடி. வருகிற 2024 புத்தாண்டு மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்க விரும்பினால் இந்த செடியை வீட்டிற்கு வாங்கி வாருங்கள். இந்த செடி வீட்டில் இருந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிப்பதோடு வீட்டு சூழல் அமைதியாக இருக்கும்.

Oruvan

பீஸ் லில்லி

பீஸ் லில்லி என்னும் செடி அதன் பெயரைப் போலவே வீட்டின் சூழலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவி புரியும். முக்கியமாக இந்த செடியை புத்தாண்டு நாளில் வீட்டில் வாங்கி வந்தால் அது அந்த ஆண்டு முழுவதும் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

Oruvan

மணி பிளாண்ட்

வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்ட செடியாக கருதப்படும் மற்றொரு செடி தான் மணி பிளாண்ட். இந்த செடி வீட்டில் இருந்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டிற்கு அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரும்.

திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யும். முக்கியமாக வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்யும்.

Oruvan