சிறந்த விளையாட்டு ஆளுமைக்கான ‘பிபிசி’ விருதை வென்றார் மேரி ஏர்ப்ஸ்

0
109

இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளின் கோல்கீப்பர் மேரி ஏர்ப்ஸ் 2023ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு ஆளுமை என்ற பிபிசியின் விருதை வென்றுள்ளார். 30 வயதான ஏர்ப்ஸ் உலகளாவிய ரீதியில் பிபிசி நடத்திய பொது வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்தார்.

கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் இரண்டாவது இடத்தையும், உலக ஹெப்டத்லான் சம்பியன் கத்தரினா ஜான்சன்-தாம்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

Oruvan

2022 இல் ஆர்சனல் அணியின் பெத் மீட்க்குப் பிறகு பிபிசி விருதை வென்ற இரண்டாவது பெண் கால்பந்து வீராங்கனை இவர் ஆவார்.

“நான் ஒரு கேம் சேஞ்சராக இருக்க முயற்சிக்கிறேன்” என்று விருதை வென்ற ஏர்ப்ஸ் பிபிசியிடம் கூறினார். “நான் பூமியில் வாழும் இந்த சிறிய காலத்தில் உலகை மாற்ற முயற்சிக்கிறேன். ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கான பொறுப்பை கொண்டுள்ளேன். முடிந்தவரை பலரை ஊக்குவிக்க முயற்சிக்கிறேன். இளைஞர்கள், வயதானவர்கள் எவராயினும் அவர்களை ஊக்குவிப்பேன்” என ஏர்ப்ஸ் கூறினார். சிறந்த மகளிர் கோல்கீப்பருக்கான FIFA விருதையும் மேரி ஏர்ப்ஸ் 2022ஆம் ஆண்டு பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.