Saudi Arabiaவில் விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த விசா தளம் (unified visa platform) தொடங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் அனைத்து வகையான விசாக்களும் இனி ‘KSA Visa’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய போர்டல் மூலம் வழங்கப்படும்.
இந்த புதிய முறையின் மூலம் விண்ணப்பம் கிடைத்த 60 வினாடிகளுக்குள் விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
30க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை இணைக்கும் KSA Visa Portal விசா நடைமுறையை எளிதாக்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹஜ் (Hajj Visa) மற்றும் உம்ரா விசாக்கள் (Umrah Visa) மற்றும் Business Visa, Family Visa, Visit Visa மற்றும் employment Visa ஆகிய அனைத்து விசாக்களும் புதிய தளத்தின் மூலம் விரைவாகப் பெறப்படும்.
முன்னதாக, விசா வழங்க விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 45 நாட்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஆனால் புதிய முறையின் மூலம் விண்ணப்பம் பெற்ற 60 வினாடிகளில் விசா வழங்க முடியும்.
KSA Visa தளத்தின் ஒரு முக்கிய அம்சம் smart search engine ஆகும், இது விண்ணப்பதாரருக்கு ஒவ்வொருவருக்கும் என்ன வகையான விசாக்கள் தேவைப்படும் என்பதை அறிய உதவுகிறது.