பிக்பாஸ்க்கு போகவேண்டும் என்றால் திருடன் கிட்ட கத்துக்கணும்..! கூல் சுரேஷ் பேட்டி

0
169

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 81 நாட்கள் கடந்து சென்றுள்ள இந்நிகழ்ச்சியில் பிரீஸ் டாக்ஸ் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து காரசாரமாக தங்கள் பிள்ளைகளையும் போட்டியாளர்களையும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேட் செய்து வீட்டைவிட்டு வெளியேறிய கூல் சுரேஷ் தொலைக்காட்சி நடத்திய பேட்டியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் போகவேண்டும் என்றால் திருடனிடம் சென்று எப்படி அந்த வீட்டில் இருக்க வேண்டும், மாறிமாறி பேசுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும்.

காவல்துறையிடம் சென்று எப்படி திருடனை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டும். விஷ்ணு விஜய், தினேஷ், மணி போன்ற மூவரும் உண்மையாக இருக்கிறார்கள். மீதி பேர் எல்லோரும் பொய்யாக இருக்கிறார்கள்.

கடினமான போட்டியாளர் அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விசித்ரா போன்றவர்கள் என்று தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கற்றுகொண்டதாகவும் கூறியிருக்கிறார் கூல் சுரேஷ்.