விஷ்ணு – பூர்ணிமா காதல்..அம்மாவிடம் சொன்ன மாயா; அம்மா சொன்ன தகவல்

0
194

பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு ஆகியோர் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் காதலிப்பதாக மற்ற போட்டியாளர்களும் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இதுவரை காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் தொடர்ந்து நெருக்கமாகவே பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பூர்ணிமாவின் அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அவர் பூர்ணிமாவை ஒரு பக்கம் பாராட்டி இருந்தாலும் ஒரு விஷயத்திற்காக விமர்சித்திருந்தார். எல்லா விஷயத்தையும் ரொம்ப நீளமாக பேசாதே, அடுத்தவர்களை தேவையில்லாத வார்த்தைகளில் பேசுவதை நிறுத்து என அட்வைஸ் கூறி இருக்கிறார்.

காதல் ?

அதற்குப் பிறகு பூர்ணிமாவின் அம்மா அனைத்து போட்டியாளர்கள் உடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு மட்டும் அங்கு வராமல் ஒதுங்கி இருக்க, அவர் வர கூச்சப்படுகிறார் என கிண்டல் செய்தனர்.

அதன் பின் விஷ்ணு அங்கு வந்து அவர, மாயா ‘அவர் உங்கள் மகளை காதலிக்கிறார். ஆனால் அதை இருவரும் கொள்ள மறுக்கிறார்கள்’ என போட்டு உடைத்து விடுகிறார். அதற்கு பூர்ணாவின் அம்மா பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

உங்க பொண்ணு வீட்டிலும் இப்படித்தானா என விஷ்ணு கேட்க. “இப்படித்தான் அவள் அண்ணன் உடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். இங்கே உன்னுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள்” என கூறுகிறார்.

அதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் விஷ்ணு அண்ணன், பூர்ணிமா தங்கை என சொல்லி கலாய்த்து இருக்கின்றனர்.  

விஷ்ணு - பூர்ணிமா காதல் பற்றி அம்மாவிடம் சொன்ன மாயா.. அவர் இப்படி சொல்லிட்டாரே | Poornima Mom Reacts To Vishnu Poornima Love