4.80 கோடிக்கு ஏலம் போன இலங்கை வீரர்
ஐ.பி.எல் மினி ஏலத்தில் இலங்கை வீரர் நுவன் துஷார 4.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.
அதேபோல் ஜே ரிச்சர்ட்சனை ஐந்து கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. ராபின் மின்ஸ் 3.60 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
முஸ்தாபிசுர் ரஹ்மான் சென்னை வசம் ஆனார்
பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார். அவரது அடிப்படை விலையான இரண்டு கோடிக்கு அவர் வாங்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் பல சர்வதேச வீரர்கள் இந்த ஏலத்தின் போது வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏலம் போகாத தமிழக வீரர்
துபாயில் இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் மினி ஏலத்தில் தமிழக வீரர் முருகன் அஷ்வினை யாரும் ஏலமெடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகளில் விளையாடிய அவர் சிறந்த சுழல் பந்துவீச்சாளர் ஆவார்.
பல உள்ளூர் போட்டிகளிலும் அவர் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். எனினும் அவரை ஏலம் எடுக்க எந்த அணிகளும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமார் குஷாக்ராவை ஏழு கோடிக்கு வாங்கியது டெல்லி
இந்திய வீரர் குமார் குஷாக்ரா 7.20 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் யாஷ் தயாள் ஐந்து கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
சுஷாந்த் மிஸ்ரா 2.20 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அத்துடன், ஆகாஷ் சிங் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
கார்த்திக் தியாகி 60 லட்சம் ரூபாவிற்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். ராசிக் தர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாவிற்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
7.40 கோடிக்கு ஏலம் போன ஷாருக் கான்
இந்திய வீரர் ஷாருக் கான் 7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் அவரை குஜராத் அணி வாங்கியுள்ளது. பஞ்சாப் அணியும் ஷாருக் கானை வாங்க தீவிர ஆர்வம் காட்டியது. இறுதியில் குஜராத் அணி அவரை வாங்கியுள்ளது.
ஷாருக் கானுக்கு கடும் போட்டி
இந்தியாவின் சகல துறை வீரர் ஷாருக் கானை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவரது அடிப்படை விலை 40 லட்சத்தில் இருந்து தற்போது நான்கு கோடியையும் தாண்டி ஏலம் கேட்கப்பட்டுள்ளார். குஜராத் அணி அவரை வாங்க கடுமையாக போட்டியிடுகின்றது.
சமீர் ரிஸ்வியை வாங்க கடும் போட்டியிட்ட சென்னை
இந்திய வீரரான சமீர் ரிஸ்வியை வாங்குவதற்கு சென்னை அணி மிகவும் ஆர்வம் காட்டி அவரரை 8.40 கோடிக்கு வாங்கியுள்ளதுஇ குஜராத் மற்றும் டெல்லி அணிகள் அவரை வாங்க சென்னையுடன் கடும் போட்டியிட்ட நிலையில், சென்னை அணி அவரை 8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல் அங்கிரிஷ் ரகுவன்ஷ், கொல்கத்தா அணியால் 20 லட்சம் ரூபாவிற்கு வாங்கப்பட்டுள்ளார்.
விலை போகாத இந்திய வீரர்கள்
ரோஹன் குன்னும்மாள், சவுரவ் சவுகான். பிரியன்ஸ் ஆர்யா மற்றும் மனன் வோஹ்ரா போன்ற இந்திய வீரர்கள் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
சுபம் துபேவை வாங்கியது ராஜஸ்தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுபம் துபேயை 5.80 கோடி ரூபாவிங்கு வாங்கியது
விலை போகாத சர்வதேச அணிகளின் சுழல் பந்துவீச்சாளர்
தற்பேது துபாயில் இடம்பெற்று வரும் ஐ.பி.எல் மினி ஏலத்தில் பல சர்வதேச அணிகளின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஏலம் போகவில்லை.
இங்கிலாந்து அணியின் அடில் ரஷித், நியூசிலாந்து அணியின் இஷ் சோதி தென்னாப்பிரிக்கா அணியின் தப்ரைஸ் ஷம்சி ஆகியோருடன் முஜீப் ரஹ்மான் மற்றும் அக்கீல் ஹேசைன் ஆகியோரும் ஏலம் போகவில்லை. அதேபோல் அவுஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசில்வுட்டும் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரரை 4.60 கோடிக்கு வாங்கியது மும்பை
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷாங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி 4.60 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த ஆண்டு இடம்பெற்ற உலக் கிண்ண தொடரில் தில்ஷான் மதுஷாங்க சிறப்பாக பந்து வீசியிருந்தார். லக்னோ மற்றும் மும்பை அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டியிருந்தன. இறுதியில் மும்பை அணி வாங்கியுள்ளது.
ஜெய்தேவ் உனாட்கட்
இந்திய அணியின் ஜெய்தேவ் உனாட்கட் கோடிக்கு அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க்
அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் அவரை கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டது.
முன்னதாக இன்றைய ஏலத்தில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் 250 மில்லியன் ரூபாவிற்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருந்தது.
இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் படைத்திருந்தார். எனினும் அந்த சாதனையை இன்றைய நாளிலேயே மிட்செல் ஸ்டார்க் தகர்த்தியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்கிற்கு கடும் போட்டி
அவுஸ்திரேலியா அணியின் நடசத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை வாங்க கடும் போட்டி நிலவுகின்றது. தற்போது வரை அவர் 21 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளார். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் அவரை வாங்க கடும் போட்டியிடுகின்றன.
6.80 கோடிக்கு ஏலம் போன சிவம் மாவி
இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6.40 கோடி வாங்கியுள்ளது. கடந்த பருவத்தில் கொல்கத்தா அணிக்காக அவர் விளையாடியிருந்தார். இன்றைய ஏலத்தில் அவர் 50 லட்சம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தார். எனினும் அவரை லக்னோ அணி 6.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
உமேஷ் யாதவ் 5.8 கோடிக்கு விற்பனை
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாள் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.8 கோடிக்கு வாங்கியுள்ளது. பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக அவர் முன்னதாக விளையாடியுள்ளார்.
அவரை வாங்க சன்ரைசர்ஸ் மற்றம் டெல்லி அணிகள் போட்டியினட்டன. எவ்வாறாயினும் குஜராத் டைட்டன்ஸ் அவரை கடும் போட்டிக்கு மத்தியில் வாங்கியுள்ளது.
அல்ஜாரி ஜோசப் – 11.50 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 11.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
அவரை வாங்க சென்னை, டெல்லி மற்றும் லக்னோ அணிகள் கடுமையாக போட்டியிட்டன. இறுதியில் பெங்களூரு அணி அவரை வாங்கியது.
பாரத் மற்றும் சகாரியாவை கொல்கத்தா வாங்கியது
இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் கே.எஸ்.பாரத் கொல்கத்தா அணியால் ஐம்பது லட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் சேடன் சகாரியாவும் கொல்கத்தா அணியால் ஐம்பது லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் விலைபோகவில்லை
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸ் ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகவில்லை.
அதேபோல் அவுஸ்திரேலியா அணியின் ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் பிலிப் சால்ட் ஆகியோரும் ஏலத்தில் விலைபோகவில்லை. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பேர்குசனும் ஏலத்தில் விலைபோகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் வோக்ஸ் பஞ்சாப் வசம்
இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் பஞ்சாப் அணியால் 4.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
டேரில் மிட்செல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்கிறார்
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாவிற்கு வாங்கியுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டன. இறுதியில் சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஹர்ஷல் படேல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றம்
2023ஆம் ஆண்டில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பஞ்சாப் அணி அவரை வாங்கியுள்ளது. 20 மில்லியன் ரூபா அடிப்படை விலையில் இருந்து தொடங்கி 117.5 மில்லியன் ரூபாவிற்கு அவரை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.
டீரவேவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது
தென்னாப்பிரிக்க அணியின் டீரவேவை மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஆளாக வாங்கியுள்ளது. அவரது அடிப்படை விலை இரண்டு கோடிக்கு மும்பை வாங்கியுள்ளது. சென்னை மற்றும் லக்னோ அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டது. இறுதியில் மும்பை அணி வாங்கியுள்ளது.
250 மில்லியனுக்கு பட் கம்மின்லை வாங்கியது சன்ரைசர்ஸ்
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 250 மில்லியன் ரூபாவிற்கு வாங்கப்பட்டுள்ளார். முதலில் அவரை வாங்க சென்னை மற்றும் மும்பை அணிகள் கடுமையாக போட்டியிட்டன. பின்னர் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் கடுமையாக போட்டியிட்டன.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 250 மில்லியன் ரூபாவிற்கு அவரை வாங்கியுள்ளது. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு பட் கம்மின்ஸ் வாங்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 185 மில்லியன் ரூபாவிற்கு வாங்கப்பட்டமையே சாதனையாக இருந்து வந்தது.
விலை போகாத மூன்று சர்வதேச வீரர்கள்
ஐ.பி.எல் மினி ஏலம் துபாயில் இடம்பெற்று வரும் நிலையில் மூன்று சர்வதேச வீரர்கள் விலைபோகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய அணியில் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர், அவுஸ்திரேலிய நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் முன்னாள் மத்திய வரிசை வீரர் மணீஷ் பாண்டே ஆகியோர் விலை போகவில்லை.
மஞ்சள் படையுடன் இணைந்த நியூசிலாந்து நட்சத்திரம்
நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரை 1.8 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. நடந்து முடிந்த ஐம்பது ஒவர் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ரச்சின் சிறப்பாக விளையாடியிருந்தார்.
அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரையும் சென்னை அணி அவரின் அடிப்படை விலையான இரண்டு கோடிக்கு வாங்கியுள்ளது.
முன்னதாக சென்னை அணிக்கு விளையாடிய ஷர்துல் தாகூர், கடந்த பருவத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்நிலையில் அவர் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார்.
டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் அணி வாங்கியது
கடந்த மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டது. இறுதியில் 68 மில்லியன் ரூபாவிற்கு அவரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.
1.5 கோடிக்கு விலை போன வனிந்து ஹசரங்க
இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 1.5 கோடி ரூபாவிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. கடந்த பருவத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய இலங்கையின் சகல துறை வீரர் வனிந்து ஹசரங்கவை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
ஹாரி புரூக்கை வாங்கியது டெல்லி கெப்பிடல்ஸ்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது. கடந்த பருவத்தில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடியிருந்தார். சுமார் 40 மில்லியன் ரூபாவிற்கு அவரை டெல்லி அணி வாங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா அடிப்படை விலையில் இருந்து தொடங்கிய அவருக்கான ஏலத்தின் போது இறுதியில் டெல்லி அணி அவரை வாங்கியுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி அணி அவரை வாங்குவதற்கு கடும் போட்டியிட்டிருந்தது.
ஐ.பி.எல் ஏலம் ஆரம்பம்
அடுத்த ஆண்டு இடம்பெவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் சற்று முன்னர் துபாயில் உள்ள Coca-Cola அரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த எலத்தில் சுமார் 333 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
வீரர்களை வாங்குவதற்கு சுமார் 2.63 பில்லியல் இந்திய ரூபாய் பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 333 வீரர்களின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏலம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும். 10 அணிகளின் உரிமையாளர்களும் வீரர்களை வாங்குவதற்கு கடும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் 77 வீரர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.