பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டிருக்கும் மூத்த நடிகை விசித்ரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மூத்த நடிகை தான் விசித்ரா.
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “இரவு பாடகன்” என்ற திரைப்படத்தோடு தனது கலை பயணத்தை நிறுத்திக் கொண்டார்.
தனது மூன்று குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு வந்த அவர் அண்மையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் கலைத்துறையில் பயணிக்க தொடங்கினார்.
தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் 77 நாட்களையும் கடந்து பயணித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Bigg Boss Contestant with Rajinikanth