நொடியில் முகத்தில் உள்ள கருமையை போக்க டிப்ஸ்

0
121

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தனது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும். அதற்காக பல இயற்கை சார்ந்த விடயங்களை முயற்சித்தும் பார்ப்பார்கள். 

சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு.

இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்துவிடும். 

சில வீட்டு வைத்தியங்கள் மூல இதை சரிசெய்து விடலாம். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். 

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 

30 நிமிடங்கள் அப்படியே வைத்து கழுவவும்.

எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து உங்கள் சருமத்தை மெதுவாக தேய்த்து, இறந்த செல்களை வெளியேற்றலாம். 

ஒரு நொடியில் முகத்தில் உள்ள கருமையை போக்குவது எப்படி? | Easy Home Remedies To Remove Sun Tan In Tamil

தயிர் மற்றும் தக்காளி

தக்காளியை பச்சையாக எடுத்து தோலை நீக்கவும்.

அதை 1-2 டீஸ்பூன் புதிய தயிருடன் கலக்கவும்.

இந்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் பூசி பின் கழுவவும். 

ஒரு நொடியில் முகத்தில் உள்ள கருமையை போக்குவது எப்படி? | Easy Home Remedies To Remove Sun Tan In Tamil

வெள்ளரி சாறு

ஒரு வெள்ளரிக்காயை துண்டாக்கி, சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும். 

சாற்றை உங்கள் தோல் முழுவதும் தடவி, பின் கழுவி எடுக்கலாம். 

ஒரு நொடியில் முகத்தில் உள்ள கருமையை போக்குவது எப்படி? | Easy Home Remedies To Remove Sun Tan In Tamil

பருப்பு மாவு மற்றும் மஞ்சள்

ஒரு கப் மாவில் 1 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து, சிறிது தண்ணீர் அல்லது பால் கலந்து பேஸ்ட் தயார் செய்துக்கொள்ளவும். 

இந்த கலவையை முகம் மற்றும் உடலில் தடவி உலர விடவும்.

பின் குளிர்ந்த நீரில் கழுவவும். 

ஒரு நொடியில் முகத்தில் உள்ள கருமையை போக்குவது எப்படி? | Easy Home Remedies To Remove Sun Tan In Tamil

தேன் மற்றும் பப்பாளி

பழுத்த பப்பாளி 4-5 துண்டுகளாக வெட்டி, அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும். 

இந்த பேஸ்ட்டை தோல் முழுவதும் தடவி உலர விடவும்.

20-30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.