ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ். இளைஞன் சாதனை..

0
200

மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார்.

இலங்கை தேசிய அணி சார்பில் பங்கேற்ற சற்குணராசா புசாந்தன் குறித்த இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார்.

தேசிய நிலைப் போட்டி

சற்குணராசா புசாந்தன் யாழ்.தென்மராட்சி – சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவராவர்.

தேசிய நிலைப் போட்டிகளில் தனது சாதனையை நிலைநாட்டி வந்த புசாந்தன், தேசிய பளுதூக்கல் அணியில் இடம்பெற்று சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றார்.