பண்டிகை காலத்தை குறிவைத்து சந்தை மோசடி..!

0
109

பண்டிகை காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மோசடி கும்பலொன்று செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், பண்டிகை காலத்தை குறி வைத்து சில வியாபாரிகள் செயற்கை முறையில் முட்டை விலையை உயர்த்தி இருப்பதாகவும் முட்டை வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது சந்தையில் கோழி இறைச்சியின் விலை 1,400 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை இறக்குமதி

இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகை காலத்தை குறிவைத்து செயற்படும் மோசடி கும்பல்: பெரும் நெருக்கடியில் மக்கள் | Fraud Gangs Targeting The Festive Season

அதன்படி, 15 மில்லியன் முட்டைகளுடனான கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.