பிரான்ஸில் தலைகீழாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகள்: விவசாயிகள் நூதனப் போராட்டம்

0
160

பிரான்ஸின் கிராமப்புறங்களில் உள்ள வீதிகளில் பெயர்ப்பலகைகள் தலைகீழாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீதிகளில் பெயர்ப்பலகைகள் கழற்றப்பட்டு மீண்டும் தலைகீழாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கை ஆபத்தானை நிலையில் இருப்பதை எடுத்துக்கூறும் வகையில் இந்த பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் தெற்கு Tarn பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போது பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை அதிகரிப்பு, மானியங்கள் தாமதம், அதிகாரத்துவம் மற்றும் போட்டித்தன்மை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.