சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 டைட்டிலை வென்ற போட்டியாளர்! குவியும் வாழ்த்துக்கள்

0
197

தென்னிந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவ்வாறான நிலையில் (10-12-2023) சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ம் சீசனின் பைனல் வெகு பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ம் சீசனில் டைட்டில் வெல்லப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

ரசிகர் பலர் எதிர்பார்த்தது போலவே ஸ்ரீநிதா தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ம் சீசனின் டைட்டிலை வென்றுள்ளார். அவருக்கு 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.  

மேலும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ம் சீசனில் ஹர்ஷினி தான் ரன்னர் அப் என தமன் அறிவித்தார். அவருக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 3ம் இடம் பிடித்த அக்ஷரா லக்ஷ்மிக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பைனலுக் வந்து ஜெயிக்காதவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 டைட்டிலை வென்ற போட்டியாளர்! குவியும் வாழ்த்துக்கள் | Super Singer Junior 9 Tittle Winner Shreenitha