உடலுக்கு கேடு என்று தெரிந்தும்ஜான்சனின் பேபி பவுடரை தினமும் சுவைக்கும் பெண், உடலுக்கு கேடு என்று தெரிந்தும்!

0
97

அமெரிக்காவில் பெண்ணொருவர் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடரை திண்பண்டமாக தினமொரு புட்டியாக ரசித்து ருசித்து சாப்பிட்டு வருகிறார். அது ஆரோக்கியத்துக்கு கேடு என்பதை உணர்ந்திருந்தபோதும், அதன் சுவையிலிருந்து விடுபட முடியாது தவிக்கிறார்.

அமெரிக்காவில் திருமணமாகி குழந்தைக்கு தாயாகவுள்ள 27 வயதான ட்ரேகா மார்டின் என்னும் பெண்ணே இவ்வாறு செய்து வருகின்றார். ஆனபோதும் அனைவருடைய எச்சரிக்கையையும் மீறி அவருடைய விருப்பம் பேபி பவுடர் மீது இருக்கிறது.

குழந்தையை குளிப்பாட்டிய பின்னர் வழக்கமான தாய்மார்களைப் போலவே பேபி பவுடரை பயன்படுத்தும்போது எதேச்சையாக அதனை ட்ரேகா ருசிக்க நேர்ந்தது.

உடலக்கு கேடு என தெரிந்து யுவதியொருவர் தினந்தோறும் மேற்கொள்ளும் செயல்! | Woman Eats Putty Johnson S Baby Powder In America

மக்காச்சோள மாவில் இதர வேதிசேர்மானங்கள் சேர்க்கப்பட்ட ஜான்சன்ஸ் பேபி பவுடரில் இருந்த ஏதோவொரு ருசி அவரைக் கட்டிப்போட்டது. அதன் பின்னர் வலிய பேபி பவுடர் ருசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

இந்த வகையில் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் வசிக்கும் ட்ரேகா மார்டின் தினத்துக்கு 623 கிராம் கொண்ட ஜான்சன்ஸ் பேபி பவுடர் புட்டியை காலி செய்து வருகிறார். இதற்காக அவருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ரூ13 லட்சம் செலவாகிறது.

உடலக்கு கேடு என தெரிந்து யுவதியொருவர் தினந்தோறும் மேற்கொள்ளும் செயல்! | Woman Eats Putty Johnson S Baby Powder In America

பேபி பவுடரை வாய் நிறைய சேர்த்து அவை உமிழ் நீருடன் கரைவதன் ருசிக்கு தான் அடிமையாகிவிட்டதாக தன்னிலை விளக்கமும் தந்திருக்கிறார் ட்ரேகா.

குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமன்றி ஜான்சன்ஸ் நிறுவனம் சார்பிலும் எச்சரித்தாயிற்று ஆனாலும் பேபி பவுடரை ருசிப்பதிலிருந்து ட்ரேகாவால் மீள முடியவில்லை.

அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த மாதங்களில் மட்டும் பொறுப்பான தாயாக பேபி பவுடரை தவிர்த்திருந்தாராம். மற்றபடி பவுடரை ருசிக்காவிடில் அன்றைய பொழுது தனக்கு முழுமையடையாது என்கிறார் ட்ரேகா.