ஐநா தீர்மானத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

0
136

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பெரும் இழப்பை சந்தித்துவரும் காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

உடனடியுத்த நிறுத்தத்தை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டை அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

ஐ .நா சபை தீர்மானத்தை எதிர்க்கும் அமெரிக்கா! | The United States Opposes The Un Resolution

இஸ்ரேலின் போர்குற்றங்களிற்கு உடந்தையாகும் அமெரிக்கா

அமெரிக்கா தனது இந்த நடவடிக்கையின் மூலம் இஸ்ரேலின் போர்குற்றங்களிற்கு தானும் உடந்தையாகும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் அநீதிகளில் ஈடுபடுகின்ற நிலையில் தொடர்ந்தும் அதற்கு இராஜதந்திர பாதுகாப்பையும் ஆயுதங்களையும் வழங்குவதன் மூலம் யுத்த குற்றங்களிற்கு உடந்தையாகும் ஆபத்தை அமெரிக்கா எதிர்கொள்கின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

அதேவேளை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில் பிரிட்டன் வாக்கெடுப்பை தவிர்த்துள்ளது.

ஐ .நா சபை தீர்மானத்தை எதிர்க்கும் அமெரிக்கா! | The United States Opposes The Un Resolution