சித்தங்கேணி இளைஞன் மரணம்: பொலிஸாரை அடையாளம் காட்டிய சாட்சி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0
87

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த இளைஞன் வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி “உயிரிழந்தவரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸாரின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமையால் அடையாள அணிவகுப்பை நடத்த வேண்டாம்” என்ற கோரிக்கை சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சித்தங்கேணி இளைஞன் மரணம்: பொலிஸாரை அடையாளம் காட்டிய சாட்சி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Chittakeni Youth Murder Witness Identifies Suspect

இதன்போது உயிரிழந்த இளைஞரை தாக்கியதாகக் கூறப்படும் 4 பொலிஸாரை அடையாள அணிவகுப்பில் பிரதான சாட்சி அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டார்.