கடல்தாண்டிச் சென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த சிறுமி; பலரும் வாழ்த்து!

0
108

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதுடன் தான் பிறந்த மட்டக்கள்ப்பு மண்னுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் பி.எம்.எச்.இல் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

கடல்தாண்டிச் சென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த சிறுமி; பலரும் வாழ்த்து ! | Tamil Girl Who Achieved A Record Ucmas Malaysia

 2500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கடந்த 3 ஆம் திகதி மலேசியாவில் 80ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில் 6 வயதுடைய அக்ஷதா போட்டியில் கலந்து கொண்டு 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியும் மாமாங்கம் யுசிமாஸ் மனக்கணக்கு கல்வி நிலையத்தில் மாணவி கல்வி கற்றுவவதாகவும் கூறப்படும் நிலையில் வெற்றிபெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

கடல்தாண்டிச் சென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த சிறுமி; பலரும் வாழ்த்து ! | Tamil Girl Who Achieved A Record Ucmas Malaysia