T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முதலிடம்

0
135

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலில், முதல் இடத்தில் இருந்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இலங்கையின் வனிந்து ஹசரங்கா 679 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மஹீஷ் தீக்‌ஷனா 677 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் பிஷ்னோய் மட்டுமே டாப் 10-ல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.