‘லால் சிங் சத்தா’ சிறந்த வரவேற்பைப் பெறாவிட்டாலும் சிறந்த அனுபவத்தைத் தந்தது – நாக சைதன்யா நெகிழ்ச்சி

0
84

விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தூத்தா’ (Dhootha). இதில் நடிகர் நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர், பிராச்சி தேசாய், பசுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து ‘தூத்தா’ வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் அவரின் இந்தி அறிமுகம் சரியாக அமையாதது பற்றி கேட்கப்பட்டது.

அவர் பேசியதாவது,

“எனது இந்தி அறிமுகமான ‘லால் சிங் சத்தா’ சரியான வரவேற்பைப் பெறவில்லை என்று கேட்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அந்தப் படத்தில் அமீர்கானுடன் நடித்ததில் கற்றுக் கொண்டது அதிகம். அதனால் அதில் நடித்ததில் மகிழ்ச்சிதான்” என்று பேசினார்.