தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்! (Photos)

0
114

தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(04.12.2023) காலை நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது.

வாகன நெரிசல்

இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை​​ ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பத்தரமுல்லை – பொல்துவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.