யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது.
இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளதாவ்து,
கடந்த 21.11.2023 ஆம் திகதி பிரசவ வலியின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே சிசேரியன் சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளை இளம் தாயான விதுஷா ஈன்றெடுத்துள்ளார்.
பிரசவம் நடந்த அடுத்த நாள் மாலையில் அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறி யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பட்டார்.
சிறுநீரகம் முழுவதுமாக கிருமித்தொற்று
மேலதிக சிகிச்சை வீட்டை வந்தடைந்த பின் விதுஷாவின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பருத்தித்துறை றூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றபோது வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறுநீரகம் முழுவதுமாக கிருமித்தொற்று அனைத்து உறுப்புகளும் பழுதடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக விதுஷாவை தயார்நிலையில் வைத்திருந்தனர்.
சிறிது நேரத்தின் பின்னர் காப்பாற்றமுடியாது என கைவிரித்து விட்டனர்.
விதுஷாவின் மரணம் குறித்த விசாரணையின்போது வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மற்றும் பருத்தித்துறை பதில் நீதவான் ஆகியோர் மரணம் குறித்து சந்தேகப்பட எதுவும் இல்லை எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டார் தரப்பு
023. 11. 21 அன்று மாலை வயித்துக்குத்து , என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குச்
சென்றதாகவும் , அந்த வைத்தியசாலைக்கு முன்னெதிரேயுள்ள தனியார் கிளினிக் இல் பிரசவம் தொடர்பான ஆலோசனைகள் , சிகிச்சைகள் , பரிசோதனைகளைச்செய்த பெண் நோயியல் நிபுணர் சிறிதரன் டொக்டரால் அறிவுறுத்தப்பட்டமைக்கிணங்க போதனா வைத்தியசாலையின் அவரது அலகு 20 இல் , அந்த நாளே சிசேரியன் மூலம் இரண்டு பெண்குழந்தைகளைப்பெற்றெடுத்துக்கொண்டாள்.
சனிக்கிழமை காலையிலேயே ,
” அம்மா அம்மை நோய்க்குரிய அடையாளங்கள் தென்படுவதாகவும் , தனியார் மருந்துக்கடைகளில் மருந்து வாங்குமாறு எழுதிக்கொடுத்து விட்டு இது இங்குள்ளவர்களுக்கும் தொற்றிவிடும் கெதியா வீட்டுக்குப் போங்கோ அங்கே தான் இதனைப் பராமரிக்க வேண்டும் என்று சொன்னதாக விதுஷாவின் அம்மா சொல்லியழுதார் .
பிள்ளைக்கு பிறசர் நிற்பதாக சொல்லி சோதித்தவர்கள் தொற்றுநோயைக்காரணம் காட்டி துரிதப்படுத்தி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டுக்குச்செல்ல பணித்தார்கள் .
பாரம்பரிய முறைகளில் பிள்ளையைப்பராமரிக்கலாம் என்று நம்பிய போதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர் பிள்ளைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் அற்றவள் போல உடல் இயலாத நிலையில் பாலூட்டவோ பிள்ளைகளை பூரிப்போடு அரவணைக்கவோ இயலாத அளவிற்கு உடல் பலவீனமாக இருக்க , மீள வைத்தியசாலைக்குக்கொண்டு போவதைத் தவிர வழியேதும் தெரியவில்லை . என்றார் .
ஞாயிற்றுக்கிழமை காலை தொண்டைமானாறு பிரிவுக்கு பொறுப்பான குடும்பநல மாது இன்பரூபி மிஸ் இற்கு தொலைபேசி அழைப்பை எடுத்து வீட்டிற்கு வந்த விடயத்தைக்கூறிய போதும் நோயின் தன்மை பற்றிக்குறிப்பிட முடியவில்லை . அவராவது ஏதும் அறிவுறுத்தியிருப்பார் என விதுஷாவின் தங்கை அழுததுடன் ; , பத்து மாதம் காத்திருந்து அதிலும் இரட்டைப்பெண் குழந்தைகள் என அறிந்ததும் , அந்தக்குழந்தைகளை ” எப்படி எப்படியெல்லாம் ”வளர்த்து ஆளாக்குவேன் என கனவு கண்டு , பிள்ளைகளின் துடிப்பைக்கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் அதைக்கொண்டாடி மகிழ்ந்தாள் கடைசியில் “பிள்ளைகள் கவனம் ” என்ற ஒரு சொல்லோடு இப்படி ஆகிட்டாளே என புலம்பிக்கொண்டிருந்தாள் .
விதுஷாவின் கணவர் ,
” தனியார் வைத்தியசாலையில் முதல் நான்கு மாதங்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் ஆறு மாதத்திற்குப்பிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி இரண்டு மாதமும் கிழமைக்கு ஒரு தடவையும் சிறிதரன் வைத்தியரிடம் பணம் செலுத்தி பராமரிப்புச்செய்த எனக்கு எப்படித்தெரியும் யாழ் போதனா வைத்தியசாலை நிலைமை .
அப்பவும் கேட்கிறேன்
” டொக்டர் இரட்டைக்குழந்தைகள் உங்களை நம்பித்தான் நம்பிக்கையை வைத்திருக்கின்றோம் நீங்கள் தானே அந்த சீசர் செய்வீர்கள் எனக்கேட்ட போது
“நீங்கள் போகும் நேரம் யார் நிற்பார்களோ அவர்கள் தான் அதைச்செய்வார்கள் ” என்ற போதே எனக்குத்தெரியும் . அவர் அதைச் செய்யமாட்டார்” என்று அழுதார் .
என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் வைத்தியசாலைக்குள் இருந்த கட்டில்களுக்கு அதிகமாக அங்கும் இங்குமாக இருந்த கர்ப்பிணிப்பெண்களையும் குழந்தைகள் பெற்றெடுத்தவர்களையும் பார்க்கவே பயமாகத்தான் இருந்தது .
சிசேரியன் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தாயை எப்படித்தான் ஈவிரக்கம் இல்லாமல் , துண்டு வெட்டி வீட்டுக்கு அனுப்பினார்களோ தெரியவில்லை இந்த இரண்டு பச்சை மண்களுக்கும் இந்த நிலைமை வரும் என்று எனக்குத்தெரியாது என புலம்பினார்.
திரும்பவும் தன்னை தொற்றுநோய் எனக்குறிப்பிட்டு பாரபட்சப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிய வைத்தியசாலைக்குத் தானோ அழைத்துச்செல்லப்போகின்றீர்கள் ? எனப்பரிதாபமாகக்கேட்டதால் தானே தனியார் வைத்தியசாலைக்கு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை என பருத்தித்துறை றூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றேன்.
அங்கேயும் மருந்து தந்ததுடன் பி.ப 3 .மணிபோல
விசேட வைத்தியர் வருவார் வாருங்கள் என அனுப்பினார்கள் .
மூன்று மணிக்கு திரும்ப அங்கு சென்ற போது தான் அந்த வைத்தியர் சொன்னார் ; நீங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு உடனே செல்லுங்கள் என,
எப்படியோ தங்கியிருந்தே சிகிச்சை பெற வேண்டும் என சொல்லப்பட்டதால் வீட்டிற்கு வந்து வைத்தியசாலையில் தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் ஆதார வைத்தியசாலைக்கு 5 மணியளவில் சென்றிருந்தோம் .
சிறுநீரைச் சோதனை செய்து வருமாறு தனியார் ஆய்வுகூடத்திற்கு அனுப்பினார்கள் . சோதனைகளைச்செய்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தேன் .
இரவு 12 மணியிருக்கும் . அம்புலன்ஸ் இல் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள் . ஒரு வைத்தியர் அந்த வோட் ல இருந்தார் . அவர் யார் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர ,ஞாயிற்றுக்கிழமை இரவு கழிந்து திங்கட்கிழமை 9 .மணிக்கே சிகிச்சைகள் ஆரம்பித்திருந்தன .
9. மணியளவில் விதுஷாவுடன் நின்ற சகோதரி கார்த்திகாவிடம் சிறுநீரகம் எல்லாம் கிருமித்தொற்று , உறுப்புக்கள் பழுதடைந்து செல்கின்றன என்றார்கள் .
பின்னர் என்னை அழைத்து காசு செலவாகும் என்றார்கள் பணம் எவ்வளவானாலும் பரவாயில்லை ,எப்படியாவது அவரைக் காப்பாற்றுங்கள் என சொன்னேன் . அங்கிருந்து நொதேண் வைத்தியசாலைக்கு சிறுநீரைச் சோதனை செய்வதற்காக அனுப்பினார்கள் . விழுந்தடித்துச்செல்கின்றேன் .
ஒரு மணித்தியாலத்திற்குப்
பின்னர் நீங்கள் கொண்டு வந்த சிறுநீர் சோதனை ரியூப் மூலம் இங்கு ரெஸ்ட் செய்யமுடியாது . என்றார்கள் . யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அழைப்பெடுத்து தொலைபேசியில் என்ன செய்வதெனக் கேட்டேன். அவர்களும் சம்மதிக்க முன்னுக்கு விற்கின்றரியூப் ஒன்றை வாங்கிக்கொண்டு போய் சிறுநீரை எடுத்து வர , விரைந்து மூச்சிரைக்கச்சென்றேன்
என்னைப்பார்த்து , தம்பி அவசரமில்லை ஆறுதலாக நிதானமாக வாருங்கள் என்றார்கள் , அப்போதே நான் புரிந்திருக்க வேண்டும் .
திரும்பி வந்த போது சிசேரியன் உடம்பு எப்படி வலித்திருக்கும் கவிண்டு படுக்க வைத்திருந்தனர் . பார்த்துக்கொண்டிருக்க முடியாத நான் வெளியில் காத்துக்கொண்டிருக்கின்றேன் .
4.45 மணியளவில் காப்பாற்ற முடியவில்லை என சிம்பிளாக கையை விரித்தனர் . அழுத குரலில் ஆஸ்பத்திரியே குழம்பிப்போக நான் வெளியே வந்துவிட்டேன் என சொன்னார்.
இரட்டைக்குழந்தைகளை இரவு கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஒருபுறம் விதுஷாவைக்காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறம் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இது தொடர்பில் முறையிட வேண்டும் என கொந்தளித்துக்கொண்டிருந்த போது பணிப்பாளரை நன்கு தெரிந்தவரும் விதுஷாவின் கணவனது அத்தான் பணிப்பாளரிடம் முறையிட பணிப்பாளர் சத்தியமூர்த்தி டொக்டர் குழந்தைகளை வைத்திருந்த அலகு 20 இற்குள் வந்திருந்ததாகவும் அண்ணன் முறையான றொசான் சகோதரி வினோபா மற்றும் கணவரது தந்தை ஆகியோர் நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் கூற
” நாளைக்கு காலை நீங்கள் வாருங்கள் விசாரணை அறிக்கை வந்ததும் மேலதிகமாகப்பேசலாம் பிரசவம் தொடர்பில் 48 நாட்களுக்கிடையில் ஏற்படும் மரணத்தை மறைக்கமுடியாது குழம்ப வேண்டாம் ” என நம்பிக்கை கொடுத்து சமாதானப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார் .
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்தியமூர்த்தி வைத்தியரது மன எண்ணத்தை நம்பியவாறு , விசாரணை அறிக்கைகள் பக்கமும் , நீதி மீதும் பாரத்தைப்போட்டுவிட்டு வந்ததாக சொன்னார்கள் .
பார்த்துக்கொண்டிருந்த ஒற்றை நாளில் எப்படியடி நுரையீரல் சிறுநீரகம் அப்படி பாதிக்கும் எந்த நோய் நொடியென்றும் ஆஸ்பத்திரிக்கு போகாதவள் என்று வினோபா அழுதாள் .