யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

0
153

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாடசாலைக்கு நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம்

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த பாடசாலையில் 59 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் 22 மாணவர்கள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ், பாடசாலை அதிபர் இராஜினி முத்துக்குமார் மற்றும் மாணவிகளுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.