இலங்கை மன்னராட்சியின் இறுதி சிம்மாசனம்!

0
143

இலங்கையின் மன்னர் வரலாற்றில் இறுதி சுயாதீன இராச்சியத்தின் மன்னனாகவிருந்த மதுரை கன்னுசாமி நாயுடு என்ற ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் சிம்மாசனம் மன்னராட்சிமுறையை சான்றுப்படுத்துவதற்கு எஞ்சியுள்ளது.

இது இலங்கையின் இறுதி பலமிக்க இராச்சியமாக கண்டி இராச்சியத்தின் இறுதி சிம்மாசனமாகும்.

இரண்டாம் விமலதர்மசூரியனுக்கு பரிசாக இலங்கையின் கரையோரத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரால் வழங்கப்பட்டது.

இதில் இறுதியாக அமர்ந்து ஆட்சி செய்தவன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் ஆவான்.

இவன் 1815 ம் ஆண்டு கண்டி இராஜ்யத்தின் சிங்கள பிரதானிகளாலும் பௌத்ததுறவிகளாலும் பிரித்தானியர்களுக்கு காட்டிக்கொடுக்கப்பட்டு ஆட்சியை இழந்தான்.

“அட்டையால் வருமளவுக்குக்குக்கூட எதிர்ப்புகள் இன்றி கண்டியை பிரித்தானியர் கைப்பற்றினர்” என்றவாறு வரலாற்றாய்வாளர்கள் வரைவிலக்கணப்படுத்துவர்.

குறித்த சிம்மாசனம் கொழும்பு தேசிய நூதனசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.