நடிகர் விஜய்யின் தங்கையாக நடிக்கும் லவ் டுடே படத்தின் நாயகி!

0
89

லவ் டுடே படத்தின் நாயகி இவானா தளபதி68 படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தங்கையாக இவானா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்தில் இவர்கள் இருவரின் காட்சி அமைப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏனென்றால் டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படம் குறித்து தினம் தினம் புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.