இந்தியாவிற்கு தலையிடியாகும் காலிஸ்தான்; கனடாவை தொடர்ந்து இந்தியா மீது குற்றம் சுமத்தும் அமெரிக்கா!

0
129

இந்திய அரசாங்க அதிகாரியொருவர் அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என இந்திய அதிகாரியொருவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

 நியுயோர்க்கில் சீக்கியர் ஒருவரைகொலை திட்டம் 

இதேவேளை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புபட்டிருந்தார் என நிகில்குப்தா என்ற 52 வயது நபர் ஒருவருக்கு எதிராகவே இந்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு தலையிடியாகும் காலிஸ்தான் ; கனடாவை தொடர்ந்து இந்தியா மீது குற்றம் சுமத்தும் அமெரிக்கா! | Attempt To Kill Khalistan Us Blames The India

நிகில்குப்தா நியுயோர்க்கில் சீக்கியர் ஒருவரைகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரகசிய முயற்சிகளிற்கு உதவியதுடன் இந்திய புலனாய்வு பிரிவிற்கும் இந்திய பாதுகாப்புதரப்பை சேர்ந்தவருக்கும் உதவினார் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை கடந்த காலங்களில் கனடாவில் காலிஸ்தான் ஆதர்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சுமத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.