ஹமாஸின் இருந்து எலான் மஸ்க்கிற்கு அழைப்பு

0
149

ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் எலோன் மஸ்க்கை காஸாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட அழிவின் அளவைக் காண காஸா பகுதிக்கு வருகை தருமாறு ஹமாஸ் அதிகாரி எலோன் மஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பெய்ரூட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் “காஸா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் அழிவின் அளவைப் பார்க்க அவரை காஸாவுக்கு வருமாறு நாங்கள் அழைக்கிறோம்.” என தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து ஹம்தானின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.