யாழில் துஷ்பிரயோகம் செய்து யுவதி கொலை! மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது

0
231

யாழில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று இராணுவ சிப்பாய்களில் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு சந்தேகநபருக்கு எதிராக மீண்டும் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்லுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

யாழ். பலாலி வீதியின் கோண்டாவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உந்துருளியில் பயணித்த யுவதி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக, குறித்த இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் துஷ்பிரயோகம் செய்து யுவதி கொலை : இராணுவத்தினருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Young Woman Murder Abused Jaffna Soldiers Released